மர பயிர்களுக்கான பூச்சி மேலாண்மை

தேக்கு
தேக்கு
இலை உண்ணும் புழு –ஹிப்லியா பியூரா
பூச்சியின் விவரம்

  • பருவமழை தொடங்கும் போது இப்புழுவின் சேதம் ஆரம்பிக்கிறது.
  • புழு கருப்பு அல்லது வெளிர் பச்சை நிறத்திலும் நீளவாக்கில் லேசான கோடுகளோடும் இருக்கும் அல்லது கருப்பு நிறத்திலும் மேற்புறத்தில் அகலமான ஆரஞ்சு கோட்டுடனும் இருக்கும்.

அந்துப்பூச்சி வெளிர் அல்லது பழுப்பு கலந்த சிவப்பு நிறத்திலும் இருக்கும்

சேத அறிகுறி   

  • இலைகளை உண்டு சேதம் உண்டாக்கும்
  • இலையின் மைய நரம்பு தவிர்த்து இலை முழுவதையும் உண்ணும்

மேலாண்மை

  • மோசமாகச் சேதமடைந்த இலைகளை புழுக்களோடு சேர்த்து எடுத்தல்
  • வேப்பங்கொட்டைச்சாறு 5 சதம் தெளித்தல்
  • விளக்குப்பொறி அமைத்தல்

தேக்கு நரம்பு இலைப்பூச்சி – யூடெக்டோனா மாச்சராலிஸ்
பூச்சியின் விவரம்

  • புழு பச்சை கலந்த பழுப்பு நிறத்திலும், வெளிர் பழுப்பு நிறத்தலையுடனும் இருக்கும்
  • தாய், அந்துப்பூச்சியின் முன்னிறக்கைகள் அடர் மஞ்சள் நிறத்திலும், இளஞ்சிவப்பு நிறக்குறுக்குக் கோடுகளைக் கொண்டுமிருக்கும். பின்னிறக்கைகளில் சிவப்பு நிறப்பட்டை இருக்கும்.

                                    
சேத அறிகுறி

  • புழுப்பருவம் சேதம் உண்டாக்குகிறது.
  • இலைகளை நரம்பு போல் ஆக்குதல்
  • புழுக்கள் இலையின் பச்சையத்தை உண்பதால் நரம்புகள் மட்டும் எஞ்சியிருக்கும். அது சல்லடை போன்ற தோற்றமளிக்கும்.
  • இலை பழுப்பு நிறம் அடைதல்

மேலாண்மை

  • கலப்புக்காடுகள்
  • கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி எடுக்க வேண்டும்.
  • வேப்பங்கொட்டைச்சாறு 5 சதம் தெளித்தல்
  • குவினால்பாஸ் மருந்தை லிட்டருக்கு 2 மி.லி. என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
தேக்கு இலை உண்ணும் புழு
புழு 

அந்துப்பூச்சி

சேத அறிகுறி

 

தேக்கு நரம்பு இலைப்பூச்ச
புழு சேத அறிகுறி

 

 

 

 

Updated on November, 2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014